எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்! சட்டசபைக்கு செல்வதற்கு முன் ஓபிஎஸ் அளித்த பதில்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. முதல் நாளான நேற்று இபிஎஸ் அணியில் இருந்து யாரும் பங்கு பெறவில்லை. மேலும் நேற்று சபாநாயகர் வெளியிட்ட சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் இடம் பெற்று இருந்தது. இதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நேற்று சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கு பெறாமல் புறக்கணித்த ஈபிஎஸ் அணியினர் இன்று பங்கு பெற உள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு வீட்டில் இருந்து புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் "சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட கடிதங்கள் மீது சபாநாயகர் எந்தவிதமான முடிவை எடுப்பார். உங்களுக்கு எதிராக முடிவு எடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?" என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் "சபாநாயகர் எடுக்கும் முடிவுகளை முழுமானதுடன் ஏற்றுக் கொள்வேன்" என கூறிவிட்டு சட்டசபைக்கு புறப்பட்டுச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Answer given by OPS before going to assembly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->