எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி... இப்படித்தான் இருப்பேன்.. பிரஸ் மீட்டில் எகிறிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் "பிராமணர்களை அமைதியாக ஓரம்கட்டும் பணியை பாஜக செய்கிறதா? புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிலும் இது நடந்ததாக ஒரு பேச்சு உள்ளதே?'' என கேள்வி எழுப்பினார்.

இதனால் டென்ஷனான அண்ணாமலை "புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் செங்கோலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இருந்தே ஆதீனத்தில் இருந்து செங்கோல் வருகிறது. செங்கோலை கொடுப்பதற்கு சைவ ஆதீனங்களை அழைக்க வேண்டும். அதன் அடிப்படையில் 21 ஆதீனங்கள் சென்றனர்.

சிருங்கேரி மடத்தில் இருந்து மடாதிபதி டெல்லிக்குச் சென்றார். அதனை சிலர் பார்க்கவில்லை. சர்வ மத பிரார்த்தனைகளும் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். சிலருக்கு கண்ணில் மஞ்சள்காமலை இருந்தால் அப்படித்தான் குறையாக பார்ப்பார்கள். கட்சிக்குள்ளேயே சிலருக்கு அந்த வியாதி வந்துவிடுகிறது.

சில பேர் இன்னும் பழம்பெருமை பேசுகின்றனர். கடந்த 1930ல் பாஜக அப்படி இருந்தது, இப்படி இருந்தது என கூறி வருகிறார்கள். பாஜக அனைவருக்கும் சொந்தமான கட்சி, எனவே தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. இந்த கட்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு சிலரால் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக இல்லை. இது ஒரு காட்டாற்று வெள்ளம்.

எத்தனை நாள்யா கத்துவீங்க.. டெல்லிக்கு கிளம்பி போங்க.. நான் வேண்டாம் என்றா சொல்கிறேன். இண்டிகோவில் குறைந்த விலையில் டிக்கெட் இருக்கு. லேட் நைட் டிக்கெட் எடுத்தால் ரூ.4,000க்கே இருக்கு.. என்ன முடியுமோ பண்ணுங்க. அண்ணாமலையை பொறுத்தட்டில் இப்படித்தான் இருப்பான். அண்ணாமலைக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி.

தலைவராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பேன். தொண்டனாக இருந்தாலும் இப்படித்தான் இருப்பேன். ஊரில் போய் பசுமாடு, ஆட்டை பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன். அண்ணாமலை பாஜக தலைவராக வந்தவுடன் மாறிவிட வேண்டும் என்பதெல்லாம் நடக்காது. தொண்டர்களுக்காக இருக்கும் தலைவன் நான். கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என இருப்பவன் நான்" என செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai spoke arrogantly at press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->