மு.க ஸ்டாலினுக்கு கார் இல்லை... ஆனால் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில் சொத்து... பகீர் கிளப்பும் அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை திமுகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த விழாவில் பேசிய அவர் "நான் சொத்து பட்டியல் வெளியிடுவது போல திமுகவை பார்த்து நீங்களும் இதே போன்று சொத்து பட்டியலை கொடுங்கள் எனக் கேட்டால் திமுகவில் உள்ள ஒரு வட்ட தலைவர் கொடுப்பாரா.? 

அவ்வாறு கொடுக்க மாட்டார்கள். இருந்தாலும்  திமுகவினருடைய சொத்து விவரங்களை நீங்கள் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறேன். வரும் ஏப்ரல் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்களுடைய சொத்து பட்டியலை வெளியிடப் போகிறேன்.

திமுகவின் தலைவர் மு.க ஸ்டாலின் அவருடைய குடும்பம் சொத்துக்கள் என்ன..? எங்க..? வைத்துள்ளனர் நமக்குத் தெரிந்த வரைக்கும் பார்த்தால் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டுகிறது. இதன் அனைத்து விவரங்களும் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும். திமுகவின் தலைவர் ஸ்டாலினில் ஆரம்பித்து திமுகவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எம்எல்ஏக்கும் தனித்தனி சொத்து பட்டியல் என்னிடம் உள்ளது.

நான் இதில் ஒரு பிரதியை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து விட்டேன். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் சொத்து பட்டியில் கொடுத்திருப்பார். தனது தேர்தலின் பொழுது என்னிடம் சொந்த காரே இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவரிடம் எந்த கார் என்ன கார் உள்ளது என்பதை நாங்கள் சொல்கிறோம். ஸ்டாலினுடைய பையன் லெக்சஸ் கார் வாங்கும் பொழுது அதற்கு வரி கட்டாமல் இந்தியாவிற்குள் ஏமாற்றிக் கொண்டு வந்த பொழுது சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். உங்களுக்கு எதிரா உங்க பையனுக்கு எதிரா சிபிஐயில் கொடுத்த சாட்சி ஆவணங்களை ஏப்ரல் முதல் வாரம் ஒருமுறை வெளியிடப் போகிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai said DMK property worth more than 2lakh crore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->