நீங்க எப்படினா இருங்க.. அதை உங்க வீட்டில வச்சுக்கோங்க.. எஸ்.வி சேகருக்கு அண்ணாமலை பதிலடி.!!
Annamalai responds to SVe Shekhar criticism
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர் அண்ணாமலை பிராமணர்களுக்கு விரோதி. அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் என எஸ்வி சேகர் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "டெல்லிக்கு போக சொல்லுங்கள். டெல்லி செல்ல இண்டிகோவில் ரூ.6,500 தான் டிக்கெட். யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையை அவர்களை டெல்லிக்கு போகச்சொல்லுங்கள்.

நான் யாருக்கும் விரோதி இல்லை. ஆனால் என்னை பழைய பஞ்சாங்கத்தை வைத்து கட்டுப்படுத்தலாம் என நினைத்தால் அது நடக்காது. நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன். அதில் நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனிதன் நான். நான் அப்படி, இப்படி இருந்தேன். என் அப்பா அப்படி, தாத்தா இப்படி இருந்தார். நான் 40 வருடமாக இப்படி இருந்தேன் என்பதையெல்லாம் வீட்டில் வைத்து விட வேண்டும். அது எஸ்.வி சேகருக்கு மட்டுமல்ல அவருடன் இருக்கும் அனைவருக்கும் தான் இதை சொல்கிறேன்.
பழைய கதைகளை எல்லாம் கூறி கட்டுப்படுத்தும் வேலையை என்னிடம் வைத்து கொள்ள வேண்டாம். வேண்டுமென்றால் டெல்லி செல்ல டிக்கெட் வாங்க பணம் இல்லாவிட்டால் நாங்களே ரூ.6,500க்கும் டிக்கெட் போட்டு தரேன். டெல்லிக்கு போங்க.. என்னை பதவியில் இருந்து தூக்க பேசி முயற்சி செய்யுங்கள்" என எஸ்.வி சேகருக்கு அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.
English Summary
Annamalai responds to SVe Shekhar criticism