பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ள அண்ணாமலை; பாஜகவில் இருந்து விலகுவது உறுதி..? 02 நாட்களில் புதியக் கட்சி தொடக்கம்..? - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஸ் அதிகாரியுமான அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் நேரில் விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றால் போல நேற்று (ஜூன் 1) இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 'இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். உட்கார்ந்து விரிவாகப் பேசுகிறேன். உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன். நிச்சயம் இரண்டு நாட்களில் பேசுகிறேன்' என பதிலளித்தார்.

இதனிடையே, கோவை மாநகரின் பல பகுதிகளில், அவரது ஆதரவாளர்கள் ‘தலைவா வா! தரணி ஆள வா!’ என  போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை அதன் தொடர்ச்சியாக அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அடுத்ததாக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அவர் சந்தித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை இ-மெயில் மூலம் கட்சித் தலைமைக்கு ஏற்கெனவே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சந்திப்புகளின் போது, தனது முடிவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கியதாகத் செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

நிதின் நபின், பி.எல். சந்தோஷ், அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அனைவருமே அவர் கட்சியில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும், எனினும், தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறியதாக சொல்லப்படுகிறது.

ஜூன் 04-ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அண்ணாமலை கட்சி தொடங்கினால் அதற்கு ரஜினிகாந்த்தின் வெளிப்படையான ஆதரவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலையில் புதியக் கட்சி ஆன்மிகத்தையும் தேசியத்தையும் மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும், இது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு கட்சித் தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதையடுத்து அவர் டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Meets Senior BJP Leaders


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->