சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் பிரச்சினை மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் இறுதி தேதி..?
What is the deadline to apply for the re evaluation of answer sheets for the CBSE Class 12 Board Exams
சிபிஎஸ்இ - பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் பிரச்சினை மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 06-ஆம் தேதி என்றும், ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளதாவது;
12-ஆம் வகுப்பு விடைத்தாள் பிரச்சினைகள் (விடைத்தாளில் பக்கங்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள், வரைபடம், கிராப்ஸ் காணாமல் போயிருப்பது) மற்றும் மறுமதிப்பீட்டுக்குக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு (https://www.cbse.gov.in/) ஜூன் 02-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

அதன்படி, விடைத்தாளில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புவோர், அனைத்து பிரச்சினைக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், விடைத்தாள் பிரச்சினைக்கு ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.100. மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிய கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனி்ல் செலுத்த வேண்டும் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 06-ஆம் தேதி வரை மட்டுமே என்றும், ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
What is the deadline to apply for the re evaluation of answer sheets for the CBSE Class 12 Board Exams