திமுக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்; பதிலளிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா..? அண்ணாமலை சவால்..! - Seithipunal
Seithipunal


நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? என்று 10 கேள்விகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி மத்திய அரசை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடியாக திமுக அரசிடம் ஆறு கேள்விகளை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

01. 2023-24ம் ஆண்டு CAG அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?

02. 2023-24ம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?

03. 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28,024 கோடி ரூபாயில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால் இவை வழங்கப்படவில்லை. ஏன்?

04. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது திமுக. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

05. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் புதிதாக கடன் வாங்கியது ஏன்?

06. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்?

இவற்றிற்கு பதிலளிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா? அடுத்த முறை நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பத்து கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கும் பதில் அளித்து அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் எழுப்பிய 10 கேள்விகள்.

01-நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

02-ஊழல்வாதிகள் பாஜவின் கூட்டணிக்கு வந்தபின்பு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?

03-நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

04-மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

05-எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

06-பாஜ தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன்?

07-இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

08-கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

09-இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai has asked 06 questions against the DMK government


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->