மொராக்கோவில் பெரும் துயரம்: குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலி; 16 பேர் படுகாயம்..!
19 killed in residential building collapse in Morocco
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்களில் இரண்டு இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானதில், இடிபாடுகட்டில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மேலும், 16 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
19 killed in residential building collapse in Morocco