திமுக முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் கட்சியின் உறுப்பினர் அட்டையை வீசி ஆவேசம்; அறிவாலயத்தில் பரபரப்பு..!
There was a stir in Arivalayam after former DMK MLA Adalarasan threw away the partys membership card
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அனுமதி கொடுக்காததால், திமுக முன்னாள் எம்எல்ஏ., அவரது, உறுப்பினர் அட்டையை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கட்சியின் திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் இன்று திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது, அங்கிருந்த காவலர்கள் அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது உறுப்பினர் அட்டையை துாக்கி வீசியுள்ளார்.
அத்துடன், கடும் கோபமடைந்த முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், 'நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதிக்க மறுக்கிறீர்களா..?'' என்று ஆவேசமாக கேட்டுள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில், பின்னர்,ஆடலரசன் - முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கிடைத்ததோடு, அவர் முதல்வரை சந்தித்துள்ளார்.
English Summary
There was a stir in Arivalayam after former DMK MLA Adalarasan threw away the partys membership card