வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளரை வர்ணித்து சர்ச்சை; மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்..!
Donald Trump gets into controversy over his description of the White House press secretary
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளரான 28 வயதான கரோலின் லீவிட் அழகை வர்ணித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, ட்ரம்ப், ''இன்றைக்கு நம்ம 'சூப்பர் ஸ்டார்' கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவர் நல்லவங்க இல்லையா? கரோலின் நல்லவரா..? உங்களுக்கு தெரியும். அவர் தொலைக்காட்சியில் வரும் போது ஆதிக்கம் செலுத்துகிறார். அவளுக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் எங்களிடம் சரியான கொள்கை உள்ளது. அவர் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார். '' என்று வர்ணித்துபேசி இருந்தார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து நாட்டின் அதிபர் டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. அத்துடன், டிரம்பின் கருத்துக்கள் அருவருப்பானவை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். அமெரிக்காவின் அதிபராக உயர் பதவியில் இருக்கும் ட்ரம்ப் இத்தகைய கருத்துக்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதாவது, பெண்களின் தோற்றம் குறித்து பேசி சர்ச்சையில் சுக்குவது அதிபர் டிரம்ப் இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே..? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நேர்காணலின் போது, கரோலின் லீவிட் அழகை வர்ணித்துசர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Donald Trump gets into controversy over his description of the White House press secretary