அண்ணாமலை மாற்றம்: "திமுகவை வீழ்த்த அமித் ஷா வகுத்த யுக்தி" - ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில், 'துக்ளக்' இதழின் 56-வது ஆண்டு விழாவில் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி இது குறித்து முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

கூட்டு முடிவு: அண்ணாமலையைத் தன்னிச்சையாக மேலிடம் மாற்றவில்லை. அவரிடம் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையும் கட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்.

அரசியல் யதார்த்தம்: பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனியாக வளர்ந்து வெற்றி பெற இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், தற்போதைய சூழலில் தி.மு.க.-வை உடனடியாக வீழ்த்துவதே முக்கிய இலக்கு. அதற்கு எதார்த்தமான அரசியல் யுக்திகள் (Realism) அவசியம்.

அதிமுக - பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி 2024-ல் எடுத்த பிடிவாதமான முடிவை மாற்றி, தற்போது பா.ஜ.க.-வுடன் ஒத்துழைக்க முன்வந்துள்ளார். தி.மு.க.-வை வீழ்த்த இந்த ஒருங்கிணைப்பு மிகவும் தேவையானது.

அமித் ஷாவின் வியூகம்: மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-வை அரியணையில் ஏற்றிய அமித் ஷாவின் 'மாஸ்டர் பிளான்' இப்போது தமிழ்நாட்டின் மீது திரும்பியுள்ளது. அமித் ஷாவின் வியூகத்தின் ஒரு பகுதியே இந்தத் தலைமை மாற்றம்.:

அண்ணாமலைக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தி.மு.க. இல்லாத ஆட்சியைத் தமிழ்நாட்டில் அமைக்கவே இத்தகைய அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் குருமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Exit is Amit Shahs Strategy for TN says S Gurumurthy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->