"பேர் தான் இந்து சமய அறநிலையத்துறை.. ஆனா, இந்துக்களுக்கு எதிரா இருக்கு." அண்ணாமலை வேதனை.!
Annamalai about mandakkadu Bagavadhiamman temple Hindu manadu
இந்து சமய அறநிலையத்துறை இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கின்றார்.
சமீபத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்து சமய மாநாடு நடைபெற தடை விதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, "பகவதி அம்மன் கோவிலில் 85 ஆண்டுகளாக இந்து சமய மாநாடு நடந்து வருகிறது.

இந்த மாநாட்டை தடுக்க காரணமே இல்லாமல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் 86 ஆம் ஆண்டு இந்து சமய மாநாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும்." என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Annamalai about mandakkadu Bagavadhiamman temple Hindu manadu