'பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்கக் கூடாது'; புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு அன்பில் மகேஷ் கோரிக்கை..!
Anbil Mahesh requests the newly assuming government not to accept the PM SHRI scheme
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்கக் கூடாது என முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் (மும்மொழி கொள்கை) கீழ் வரும் 'பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்டத்தில் கையெழுத்திடக் கோரி தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மத்திய அரசு என்ன மிரட்டினாலும் இத்திட்டத்தில் இணையக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய அரசின் பிஎம்ஶ்ரீ திட்டத்தை கண்டித்து சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Anbil Mahesh requests the newly assuming government not to accept the PM SHRI scheme