காங்கிரஸ் முயற்சியை முறியடித்து, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்; அன்பழகன் பரபரப்பு பேட்டி..!
Anbazhagan gives a sensational interview stating that a government led by Edappadi Palaniswami will be formed in Tamil Nadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனி பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அதிமுக தனது எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரிக்குச் சென்று அவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது; ''பதவி வெறியால் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங்கிரஸ் முயற்சியை எடப்பாடி பழனிசாமி முறியடிப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விஜய்யோடும், அவரைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடனும் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதனை இரு தினங்களுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி இது தொடர்பாக விளக்கம் அளித்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் 45 எம்.எல்.ஏ.க்கள் இங்கு இருக்கின்றனர் என்றும், சி.வி. சண்முகம் உட்பட மூன்று பேர் வரவில்லை. அவர்களுக்கெல்லாம் தனிப்பட்ட வேலையின் காரணமாக வரவில்லை என்று அறிவித்துள்ளார்.

1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினார். அதன்பிறகு அவர்களால் இங்கு காலூன்ற முடியவில்லை என்றும், தற்போது அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் தவெகவுடன் செல்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், பதவி வெறியால் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங்கிரஸ் முயற்சியை எடப்பாடி பழனிசாமி முறியடிப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Anbazhagan gives a sensational interview stating that a government led by Edappadi Palaniswami will be formed in Tamil Nadu