எத்தனை தொகுதிகள்... யாருடன் கூட்டணி.. நாள் குறித்த டிடிவி தினகரன்!
AMMK TTV Dhinakaran 2026 Election ADMK BJP Alliance
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவரிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு, “2024 மக்களவை தேர்தலும், 2026 சட்டமன்றத் தேர்தலும் வெவ்வேறு. மக்களவை தேர்தலில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம்.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் அப்படியான ஆதரவு கிடையாது. அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் தான் கூட்டணி அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனது வலிமையை நிரூபிக்கும். கருத்துக்கணிப்புகள் எதைச் சொன்னாலும், உண்மையான தீர்ப்பு மக்களின் வாக்குகளில்தான் இருக்கும். தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவாகின்றன, எந்தக் கட்சிகள் எந்த கூட்டணியில் சேருகின்றன என்பது வரும் டிசம்பர் மாதத்திற்குள் தெரிய வரும். அப்போது அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.
அதாவது, அமமுக தனது கூட்டணித் திட்டத்தை டிசம்பரில் தீர்மானிக்க உள்ளது என்றும், எந்தக் கட்சியுடனும் இப்போதைக்கு உறுதியான பேச்சுவார்த்தை இல்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
English Summary
AMMK TTV Dhinakaran 2026 Election ADMK BJP Alliance