பட்ஜெட் முடிந்ததும் அதிமுகவை 'ஒரே போடாய் போட்ட' தினகரன்.! அமைச்சர்களுக்கு சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு தொடர்பான விவரங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமமுக துணை பொதுச்செயலாளரும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நிதியமைச்சரான பன்னீர்செல்வமே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மத்தியில் மோடி தலைமைலான அரசோடு இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதி கிடைக்கும் என தமிழக அமைச்சர்கள் கூறிவந்த நிலையில், மத்திய நிதி பகிர்வில் இருந்து 7500 கோடிக்கு மேல் வரவேண்டி இருக்கிறது என பன்னீர்செல்வமே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த நிதிநிலை அறிக்கையை முழுமையாக படித்தோம் என்றால் அடுத்து தேர்தல் எப்போது வரப்போகிறது என்ற பீதிக்காக  உருவாக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டு குடிமகன் ஒவ்வொருவர் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர். 

தமிழக அமைச்சர்கள் எல்லாம் ஏன் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர். ஆனால் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை எனக் தினகரன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk dinakaran says tamilnadu budget


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal