பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்.!! இபிஎஸ்ஐ சந்திக்கும் அமித் ஷா..!! சூடு பிடிக்கும் அரசியல் களம்..!! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி தொடருமா அல்லது முற்றுப்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் பொழுது கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் மூலம் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனை அமித் ஷாவும் உறுதி செய்தார். மேலும் அண்ணாமலைக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் செய்தியாளர்களில் சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.

மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் மாதம் தமிழகம் வரவுள்ளதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அதிமுக தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து மோதல் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக சில சமயங்களில் ஏற்பட்டது. 

இந்த சந்திப்புக்குப் பிறகு தமிழக பாஜக நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராகும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம், வாக்குச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக தென்சென்னை, கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் தேதி சமீபத்தில் உறுதியானது. வரும் ஜூன் 8ம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இன்று தேதி மாற்றப்பட்டு வரும் ஜூன் 11ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. 

இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து உறுதியான தகவலை தெரிவிக்கும் படி எடப்பாடி பழனிச்சாமி இடம் அமித்ஷா வலியுறுத்த உள்ளார் எனவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ்ஐ இணைத்து செயல்படுவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி உடன் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah coming to TN has decided on seat in AIADMK alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->