மாற்றி அமைக்கப்பட்ட பாஜக பொதுக்கூட்டம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை மாற்றம்.!
Amit sha coming Vellore meeting date Changed
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரத்தின் படி ஜூன் 11-ம் தேதி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Amit sha coming Vellore meeting date Changed