அவர் கூட பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்.... இப்படி தூண்டி விடலாமா? பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கேபி முனுசாமி மீது ஒரு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார். அதற்கு தற்போது கே பி முனுசாமி தனது விளக்கத்தினை தெரிவித்துள்ளார். அதில்,

"ஓபிஎஸ் தூண்டுதலின் பெயர் தான் கோவை செல்வராஜ் பெட்ரோல் பங்க் குத்தகை குறித்து பேசி இருக்கிறார். எனக்கு இருக்கின்ற நற்பெயரை கெடுப்பதற்கு இதுபோன்று அவர் கூறுகிறார். நான் ஓ பன்னீர்செல்வத்துடன் ஏன் பயணித்தேன் என்று வெட்கமாக இருக்கிறது. அவருடன் நீண்ட காலம் என்னைப்போல் பயணித்தவர்கள் வேதனையில் உள்ளனர்.

எனது மகன் பெயரில் 99 ஆண்டுகளுக்கு பெட்ரோல் பங்கை லீசுக்கு வாங்கியதாக கோவை செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த பெட்ரோல் பங்க் ஒரு கூட்டுறவு இணையத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் வேண்டும் என்பதற்காக, 2017 ஆம் ஆண்டு தீர்மானம் போடப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது அமைச்சராக இருக்கக்கூடிய காந்தி திறந்து வைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆரம்பித்து, 2040 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இது கூட தெரியாமல் கோவை செல்வராஜ் என் நற்பெயரை கெடுப்பதற்காக பேசியிருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வத்தை கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வெறுத்து ஒதுக்குவதன் காரணமாக, இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர்" என்று கேபி முனுசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amdk ops eps issue eps side reply to ops side 1


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->