அம்பேத்கர் பிறந்தநாள்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
Ambedkar Jayanti 2026 CM Stalin Pays Tribute and Leads Equality Day Pledge Amid Election Heat
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு (ஏப்ரல் 14, 2026), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அவருக்குச் சீரிய முறையில் மரியாதை செலுத்தினார்.
துகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!
இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.
முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ambedkar Jayanti 2026 CM Stalin Pays Tribute and Leads Equality Day Pledge Amid Election Heat