இரண்டாக உடையும் அதிமுக; தனித்து பேச்சுவார்த்தை நடத்துக்கும் 36 எம்.எல்.ஏக்கள்; எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு ஆபத்து..?
AIADMK Splits in Two Amid Dissatisfaction with Edappadi Palaniswami
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் மாத்திரம் வெற்றிபெற்று படுதோல்வியடைந்தது. இந்நிலையில், மூன்றாவது கட்சியாக உள்ள அதிமுக-வில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களுடன் தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து, புதிய ஆட்சியமைக்க அதிமுகவின் உதவியை தவெக கோரியதாக தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதிமுகவிற்கு முன்பாகவே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.
அத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. இதனால், அதிமுகவுக்கான வாய்ப்பு குறையத் தொடங்கிய நிலையில், தலா 02 உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்குமா கொடுக்காதா என கடந்த இரண்டு நாளாக தமிழக அரசியலில் பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று முஸ்லீம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளது.

இதனால் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வராவது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனபடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி அருகே நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதும் பெரும் கவனம் பெற்று வந்தது.
இதனிடையே, அதிமுக தலைமையில் புதிய ஆட்சியமையும் எனவும் திமுக இதற்கு வெளியில் இருந்து ஆதரவு அமைக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், புதிய ஆட்சியமைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்களை திமுக தரப்பு மறுப்பு தெரிவித்தது.

இந்த சூழலில், இன்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல செய்தி சேவையில் வெளியான செய்திகளாகில் படி, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக ஆட்சியமைப்பதையும், அதிமுக- திமுக கூட்டணி வைத்து திருமாவளவனை பொது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் அவர் விரும்பவில்லை என்று கூறப்பட்ட நிலையில், முதல் முறையாக அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அதிமுகவின் 36 எம்.எல்.ஏக்கள் தனித்து பேசிவருவதாக தெரிய வருகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் பொது செயலாளர் பதவிக்கு ஆப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK Splits in Two Amid Dissatisfaction with Edappadi Palaniswami