சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்! - Seithipunal
Seithipunal


கேள்வி நேரம் முடிந்த பிறகு சபாநாயகர் பதில் அளிக்க அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு! 

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று அதிமுகவைச் சேர்ந்த இரு அணி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது சபாநாயகருக்கு எதிராக இபிஎஸ் அணியினர் கோஷம் எழுப்பினர். இது குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமிக்கு மைக் வழங்கப்படவில்லை. அதற்கு இபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு மைக் வழங்குமாறு சபாநாயகர் இடம் வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட கடிதத்தின் மீதான முடிவை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என இபிஎஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

அப்பொழுது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் "இது குறித்து சபாநாயகர் நேரம் ஒதுக்கி பதிலளிப்பார் என சொல்லும் பொழுது எதிர்கட்சித் தலைவர் அமர்ந்து அதற்கான பெற்றுக் கொள்ளலாம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என பேசினார்.

இதனைத் தொடர்ந்து கடும் அமலியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் மையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சட்டமன்ற தலைவர் அப்பாவு சட்டப்பேரவையின் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLAs expelled from the assembly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->