பாஜக ஆட்சியில் அமர வாய்ப்பே இல்லை.. பற்ற வைத்த அதிமுக எம்எல்ஏ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டனை மட்டுமே தற்போது வரை இருந்து வருகிறது. தமிழகத்தில் மூன்றாவது அணிக்கான முன்னெடுப்பு அனைத்து சமயங்களிலும் தோற்றுப் போய் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை பல சமயங்களில் தெரிவித்து வருகிறார். 

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் கூட்டணி உறுதியாகி உள்ளது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இத்தகைய கருத்துக்கள் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் பாஜகவுக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இல்லாததால் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

பாஜக மட்டும் அல்லாது தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு சரியாக இல்லாததால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை மொழி உணர்வு, இன உணர்வு மற்றும் உட்கட்டமைப்பு என்கிற சாதாரண கிளை நிலையிலிருந்து வளர வேண்டும். இன்று எத்தனை இடங்களில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பல ஊர்களில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் இத்தகைய கருத்து அதிமுக பாஜக கூட்டணியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK MLA opined BJP cannot form govt in TamilNadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->