கடலூரில் பாஜக-திமுக கூட்டணி! அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? ரவுண்டு கட்டிய அதிமுக எம்.எல்.ஏ!! - Seithipunal
Seithipunal


எதற்கெடுத்தாலும் ஊடகங்களில் தோன்றி கருத்து சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன் என புவனகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் "என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஊடகங்கள் முன்பு வந்து அண்ணாமலை பேசுகிறார். ரோட்டில் பள்ளம் வெட்டினால் கூட உடனே வந்து பேட்டியளிக்கிறார். ஆனால் என்எல்சிக்கு எதிராக இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெறுகிறது. 

ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாக மாறக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் இதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. பாஜக என்எல்சி விவகாரத்தில் எங்களுக்கு துரோகம் இழைக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கண்டு கொள்ளவில்லை. நான் பேசுவது அண்ணாமலைக்கு தெரியும், ஆனால் இதுவரை அவர் பதில் கூறவில்லை.

இந்த ஐந்து மாவட்ட விவசாயிகளைப் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை. விவசாயிகள் மட்டுமல்லாமல் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ஆர்&ஆர் சட்டத்தில் பாதுகாப்பு இல்லை.

ஒற்றுமையோடு போராடிய விவசாயிகளை கட்சி ரீதியாக திமுக விவசாயிகள், திமுக அல்லாத விவசாயிகள் என பிரித்து என்எல்சிக்கு ஆதரவாக பேச வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாஜகவோடு திமுக கூட்டணியில் இருக்கிறது.

இன்று உலக நாடுகள் எல்லாம் நிலக்கரி எரிப்பை நிறுத்திவிட்டு சூரிய ஒளி மின்சாரம், நீர் மூலம் மின்சாரம், காற்று மூலம் மின்சாரம் என ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில் நிலக்கரி எரிப்பதால் சுரங்கத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நுரையீரல் நோய் இதய நோய் சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்"பாஜகவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருளண்மொழிதேவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA asked why Annamalai did not speak about NLC issue


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->