அன்றிரவு 12 மணிக்கே.. ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? - அட்டாக் மோடில் ஜெயகுமார்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையில் அதிகாரிகள் நான்காவது நாளாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி சில தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். வருமான வரித்துறை சோதனையானது ஆயிரம் முறை நடைபெற்றாலும் அதை கண்டு நான் அஞ்சப் போவதில்லை. 

சோதனைக்கு வரும் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வருவது எல்லாம் அநாகரீகம். விடியற்காலை 5 மணிக்கு சுவர் ஏறி குதிக்கும் பொழுது வந்தவர்கள் அதிகாரிகளா அல்லது திருடர்களா என சந்தேகம் எழ தான் செய்யும். அவர்கள் ஐடி கார்டு காட்டி இருந்தால் இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்று இருக்காது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வருமானவரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இத்தகைய கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்று இரவு 12 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல் துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? #Karma" என விமர்சனம் செய்து செந்தில் பாலாஜி பேசிய வீடியோவோடு, ஜெயக்குமார் கைது செய்யும் வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar criticized Senthil Balaji statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->