இந்த குற்றத்தைச் செய்த அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? அதிமுக வீடியோ வெளியிட்டு கேள்வி! - Seithipunal
Seithipunal



அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது. 

ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்!

பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா?

ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

ஆச்சரியக்குறி பரிதாபங்கள்

(பி.கு. : வெற்றிச் சான்றிதழை அமைச்சர் விருதை மகள் மறந்துவிட்டு வந்ததைப் போல, ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்ததையே மறந்துவிட்டேன் என இந்த ஆச்சரியக்குறி அமைச்சர் வினோத் சொன்னாலும் ஆச்சரியமில்லை!) என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk condemn to tvk minister vinoth


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->