வரும் 5 ஆம் தேதி...! அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
AIADMK announce for Quaide Millath 128th Birth day
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதலோடு, அக்கட்சியின் தலைமை கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது,
"கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளையொட்டி, 5.6.2023 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK announce for Quaide Millath 128th Birth day