20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஐபி அந்தஸ்து பெற்றது திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி..!
After 20 years the Tiruchengode Assembly constituency has once again regained VIP status
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணன் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
அடுத்ததாக 1977-1984 மற்றும் 2001-2006 வரை இத்தொகுதியில் அதிமுக சார்பில் சி.பொன்னையன் போட்டியிட்டு வெற்றிப் பெற்று அமைச்சராக பதவி வகித்தார். அடுத்து, 1991-96 வரை எம்எல்ஏவாக இருந்த டி.எம்.செல்வகணபதி அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்தார்.
அதேப்போன்று, முன்னாள் அமைச்சர்களான சி.பொன்னையன், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் இந்த தொகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே அக்கட்சிகளின் தலைமையிடம் மிக நெருக்கமானவர்கள்.

2001-06-க்கு பின்னர் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றாலும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதனால், இத்தொகுதி விஐபி அந்தஸ்தை இழந்தது.
இந்நிலையில், நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளராரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான கே.ஜி.அருண்ராஜ் வெற்றி பெற்று, புதிய தவெக அரசின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். இவர் கட்சி தலைவரும், முதல்வருமான விஜய்யுடன் மிகவும் நெருக்கமானவர். இதனால், இவருக்கு முக்கிய துறை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் அமைச்சரவையில் இடம் பெறுவதால், மீண்டும் திருச்செங்கோடு தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது.
English Summary
After 20 years the Tiruchengode Assembly constituency has once again regained VIP status