"சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்" இந்த பொறுப்பற்ற வாரிசு அமைச்சர் ராஜா இதுவரை சாதித்தது என்ன? அதிமுக தரப்பில் பதிலடி!
ADMk Singai Ramachandran condemn to DMK Minister TRB Raja
அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமசந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டுக்கு வரவிருந்த, அடிடாஸ் நிறுவனத்தின் முக்கிய சப்ளையரான கொரிய நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றுள்ளது.
கூகிளைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனமும் ஆந்திராவில் AI தரவு மையம் அமைக்க உள்ளது.
2 நாட்களில் ஆந்திராவில் 13 லட்சம் கோடி அளவில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் பற்றி எதிர்க்கட்சித்தலைவர் வெள்ளை அறிக்கை கேட்டால் டிஆர்பி ராஜா வெள்ளைத் தாளைக் காட்டினார்,
15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகிள் நிறுவனம் ஆந்திராவிற்கு ஏன் போனது என கேட்டால் அதானி தான் காரணம் என்றார்,
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்ட மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் லட்சக்கணக்கான கோடி முதலீடுகளை பெற்றன, தமிழ்நாடுக்கு என்ன கிடைத்தது என தகவல் இல்லை.
15000 கோடிக்கு ஃபாக்ஸ்கான் முதலீடு செய்யும் என்று சொன்னதை இல்லையென அந்த நிறுவனமே உடனடியாக மறுப்பு தெரிவித்ததற்கு சரியான விளக்கம் இதுவரை இல்லை!
இந்த கொரிய நிறுவன ஒப்பந்தத்தை 20,000 வேலைவாய்ப்புடன் பெரிய முதலீடு என்று தான் முதலில் டி.ஆர்.பி.ராஜா சொல்லி இருக்கிறார்,
அது ஏன் ஆந்திராவுக்கு போனது என்று கேட்டால், "சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்" என்பது போல் ஏதேதோ காரணம் சொல்கிறார்.
77% சதவீதம் உறுதியானதாக சொல்லும் இந்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை எப்போது வரும்?
அந்த லைனில் நிற்கும் 100 நிறுவனங்கள் யாரென்றாவது அமைச்சர் சொல்வாரா?
எதிர்க்கட்சித்தலைவரை "பெருசு" என நாகரிகமில்லாமல் விமர்சிப்பதை தவிர இந்த பொறுப்பற்ற வாரிசு அமைச்சர் ராஜா இதுவரை தொழில் முதலீட்டில் சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ADMk Singai Ramachandran condemn to DMK Minister TRB Raja