உள்ளாட்சி தேர்தல்! ஓபிஎஸ், இபிஎஸ் கொடுத்த திடீர் இன்ப அதிர்ச்சி! வியப்பில் திகைக்கும் நிர்வாகிகள்!  - Seithipunal
Seithipunal


இதுவரை அறிவிக்கப்படாத  உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வந்தது. கடந்த 15ம் தேதி முதல் நாளை 22௨ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக அறிவித்து இருந்தது. 

விருப்ப மனுக்கள் நேரடித் தேர்தல் முறையை பின்பற்றி வாங்கப்பட்டது.  மேயர் பேரூராட்சி தலைவர் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கும் சேர்த்தே விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்ட அரசாணை மூலம் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லாமல் மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து  மேயர் நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துவர்கள்  பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும்  ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்துள்ளனர். நவம்பர் 25 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை அசல் ரசீதுடன் விருப்பமனுக்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவித்துள்ளது. 

சில கட்சிகளில் அதெல்லாம் கட்சி நிதியில் சேர்த்தாச்சு என சொல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வாறு இல்லாமல் திரும்ப கொடுப்பது நிர்வாகிகளுக்கு வியப்பாகவே இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk return the money to mayor, appliers of town president post


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->