நோபல் மறுப்பு… கொந்தளித்த டிரம்ப்...! “எனக்கு அந்த பரிசு தேவையில்லை” - டிரம்ப் அதிரடி பேச்சு - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தமக்கு நோபல் அமைதி பரிசு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தார். இந்தியா–பாகிஸ்தான் மோதல் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த 8 முக்கிய போர்களைத் தாம் நிறுத்தியதாக அவர் அடிக்கடி கூறி வந்தார்.

இதன் அடிப்படையில், நோபல் பரிசு தமக்கே உரியது எனவும் டிரம்ப் அவ்வப்போது பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் நோபல் குழுவின் முடிவால் முற்றாக சிதைந்தன.

பரிசு வழங்கப்படாத நிலையில், மனம் வெந்த டிரம்ப், தற்போது “நோபல் பரிசு எல்லாம் எனக்கு முக்கியமே இல்லை” எனக் கூறி, தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஆவேசம் கலந்த குரலில் நார்வே மற்றும் நோபல் குழுவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது,“நேட்டோ நாடுகளை சரிவிலிருந்து காப்பாற்றியது நான்தான்.

என் நேரடி தலையீட்டால் நேட்டோவுக்கான நிதிப் பங்களிப்பு வரலாற்றிலேயே அதிகரித்தது. நான் களத்தில் இறங்கவில்லை என்றால் ரஷ்யா ஏற்கனவே உக்ரைனை கைப்பற்றியிருக்கும்.

நான் தனியாகவே 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நோபல் பரிசு எனக்கு ஒன்றுமே இல்லை. நார்வே என்னிடம் அந்த பரிசை நியாயமற்ற முறையில் மறுத்துள்ளது; அது முற்றிலும் முட்டாள்தனமான தீர்மானம்.சீனாவும் ரஷ்யாவும் அச்சப்படும் ஒரே சக்தி அமெரிக்காதான். உலகில் மோதல்களை கட்டுப்படுத்தி, அமைதியும் முன்னேற்றமும் உருவாக்கும் மையமாக இருப்பதும் அமெரிக்காவே.”


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nobel rejection I dont need that prize Trumps sensational statement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->