ஆலப்புழையில் அதிர்ச்சி...! பிச்சைக்காரனாக வாழ்ந்தவர் பைகளில் லட்சக்கணக்கில் பணம்...?
He lived beggar Lakhs rupees his bags Shock Alappuzha
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில், அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடமிருந்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அவர் சாலையோரமாக நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர்மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள், உடனடியாக அனில்கிஷோரை மீட்டு ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் அவரது தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததால், அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் இருந்தது.

ஆனால், சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர், தாம் வழக்கமாக தங்கியிருந்த இடத்திற்கு சென்று படுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.ஏற்கனவே கடுமையாக காயமடைந்த நிலையில், முழுமையான மருத்துவ சிகிச்சை பெறாததால், அனில்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே, அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்த உடமைகளை போலீசார் சோதனை செய்த போது, அங்கு இருந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சோதனையில், மொத்தம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 207 ரொக்கம், 12 சவுதி ரியால் நோட்டுகள், மேலும் பழைய 2,000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, அனில்கிஷோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது வழங்கிய முகவரி விவரத்தின் அடிப்படையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அவரது பைகளில் இருந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.வறுமை தோற்றத்துக்குள் மறைந்திருந்த லட்சங்களின் மர்மம், ஆலப்புழை பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
He lived beggar Lakhs rupees his bags Shock Alappuzha