பெண்கள் உயிர் போவதை ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், "நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களிடத்தில் வரவேற்பு பெறவில்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காலை உணவு திட்டம் மாணவருடைய எண்ணிக்கை 40 சதவீதம் சரிவு என்கிற ஒரு அதிர்ச்சி தகவல் இன்றைக்கு திமுக அரசினுடைய திட்டங்களின் நிலை  வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

 காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் சரிந்து உள்ளது என்பதை நாம் எளிமையாக கடந்து போய் விட முடியாது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 2022  ஆண்டு மதுரைலே செப்டம்பர் 15 ஆம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் பின்பு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகர்புற பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

கடந்து சில மாதங்களாக காலை உணவு உண்ணும் மாணவருடைய எண்ணிக்கை குறைந்து இருக்கிறது நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்து உணவையே கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்ற காரணம் என்றாலும் கூட ,சமூக நலத்துறை கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பிலே ஏறத்தாழ 4 லட்சத்து 68 ஆயிரத்து 504 மாணவர்களில்,
 2 லட்சத்து 87 ஆயிரத்து 997 மாணவர்கள் மட்டுமே காலை உணவு சாப்பிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. மொத்தத்திலே 40 சகவீதம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை என்கிற ஒரு அதிர்ச்சி தகவல் திட்டத்தினுடைய வரவேற்பை நமக்கு புரிய வைக்கின்றது.

அதேபோன்றுதான் இப்போது மகளிர் உரிமைத்தொகை மக்களிடத்திலே வரவேற்பு பெறவில்லையே என்ற நிலையில் அதை உயர்த்தி கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார் 

தேர்தல் வருகிற போது தான் உரிமைத்தொகை முதலமைச்சருக்கு ஞாபகத்துக்கு வருகிறது. 2021 ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை 2024 சட்டமன்றத் தேர்தலில் தான் ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்கள் அதற்கு பிறகு அதைப்பற்றி எந்த கேள்வியும் இல்லை. இப்போது 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து உயர்த்தி வழங்குவேன் என்று கூறுகிறார்.

தற்போது பாலியல் சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை சம்பவங்களுக்கு என்ன காரணம்? இதற்கு போதை பொருள் நடமாட்டம்  தான் காரணம்? காவல்துறை கையை கட்டப்பட்டிருக்கிறது இதை  தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? ராமேஸ்வரத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவி காதலிக்க மறுத்ததால் அவரை உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது இது போன்ற சம்பவங்களை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டாமா?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் கண்ணீர் வடித்து கவலையிலே ஆழ்ந்திருக்கிறார்கள்?
எப்போது தடுத்து நிறுத்த போகிறீர்கள்? எப்போது  நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் ?ஏனென்றால் போதையில் மூழ்கிக் கிடக்கிறது இதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமை இந்த அரசு இல்லை? அது பற்றி சிந்திக்கவும் இல்லை? அதிகாரத்தை கையில் வைத்து கொண்ட ஸ்டாலின் இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா ?

தேர்தலுக்காக திட்டங்களை அறிவித்து, மக்களை நீங்கள் வாக்கு வங்கியாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகையைக் காட்டிலும் இன்றைக்கு பாலியல் சம்பவத்தால் பெண்கள் உயிர் பறிபோகிறது அதை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலின் தீர்ப்பில்  ஸ்டாலினுக்கு மக்கள் உணர்த்துவார்கள். 

இன்றைக்கு ஜனநாயகம் மலர வேண்டும், இந்த சமுதாயம் காப்பாற்றப்பட வேண்டும்,  சட்ட ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும், போதை பொருள் நடமாட்டம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் மொத்தத்தில் தலை குனிந்து இருக்கும் தமிழகத்தை தமிழ் தலைநகர செய்ய வேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் அதற்காக  நல்ல தீர்ப்பை வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK RB Udhayakumar condemn to DMK MK Stalin woman safty


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->