#BigBreaking || ஓபிஎஸ் பதவி பறிப்பு? எடப்பாடியின் பதவியும் பறிப்பு.. கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பெரும் புள்ளிகள்.! 
                                    
                                    
                                   ADMK OPS EPS ISSUE CV SHANMUGAM PRESS MEET 
 
                                 
                               
                                
                                      
                                            
சற்று முன்பு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சிவி சண்முகம் பேசுகையில், "அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி ஆகியோரை, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

இதன் காரணமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் போதும், 30 நாட்களுக்குள் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

இதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் எந்த அனுமதியும் தேவையில்லை என்ற ஒரு சட்ட ரீதியான ஒரு குறிப்பையும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK OPS EPS ISSUE CV SHANMUGAM PRESS MEET