#BigBreaking: அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், எம்ஆர் விஜயபாஸ்கர் வேட்புமனுக்கள் ஏற்பு.!
admk ministers petition accepted
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் என்று பரிசீலனை செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி எடப்பாடி கே பழனிசாமி வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், திமுக தலைவர் மு க ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல அமைச்சர் சிவி சண்முகம், அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல அண்ணாநகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், திமுக வேட்பாளர் ராமமூர்த்தி அவர்களின் வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
admk ministers petition accepted