எல்லா அழுத்தத்தையும் சமாளிப்பேன்… என் மனைவி அருகில் இருந்தால்...! - தோனி நெகிழ்ச்சி பேச்சு - Seithipunal
Seithipunal


இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசன் வருகிற மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் போட்டிக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு அணியும் தனித்தனி பயிற்சி முகாம்களை அமைத்து, வீரர்களை முழு உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரும் சீசனுக்காக அவரது தயாரிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவி சாக்ஷி டோனி குறித்து தோனி உணர்ச்சிவசப்பட தெரிவித்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அந்த வீடியோவில் தோனி தெரிவித்ததாவது,"நான் இந்த உலகத்தையே எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவன். எத்தனை அழுத்தங்களும் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். ஆனால் அந்த எல்லா சவால்களையும் சமாளிக்க என் மனைவி என் பக்கம் இருக்க வேண்டும்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தோனியின் இந்த உணர்ச்சிபூர்வமான கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I handle all pressure if my wife around Dhoni resilience speech


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->