உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று...! - தோனி,ரோகித் வரிசையில் சூர்யகுமார் இடம் பிடிப்பாரா....?
World Cup final today Suryakumar take place line up Dhoni and Rohit
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த முக்கியமான மோதலில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மற்றும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பைக்காக நேருக்கு நேர் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்குகிறது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணி மீண்டும் கோப்பையை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மறுபுறம், நியூசிலாந்து அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது.
இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ள அந்த அணி கோப்பையை கைப்பற்ற கடுமையான சவாலாக இந்தியாவுக்கு எதிராக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்,ரோகித் சர்மா, கபில்தேவ், தோனி ஆகியோரின் வரிசையில் உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பெயரை பதிப்பாரா? என்ற ஆவலுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
English Summary
World Cup final today Suryakumar take place line up Dhoni and Rohit