இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு குவியும் ஆதரவும்... கைகோர்த்த மம்தா கட்சி... உள்ளே வந்த இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி!
by poll 2026 dmk alliance tmc support
திமுக விடுத்துள்ள அறிவிப்பில், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள் ஆதரவு!
நடைபெறவிருக்கும் 2026 மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு,
கே.ஐ.எம்.ஹக்கீம் அவர்களை மாநில பொதுச் செயலாளராக கொண்ட தமிழ்நாடு மாநில அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி;
ஜி.ஏ.சுபாஹன் அவர்களை மாநில பொதுச்செயலாளராக கொண்ட இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநிலக்குழு;
ப.தேவேந்திர ராவ் அவர்களை நிறுவனர் - பொதுச்செயலாளராக கொண்ட “அருந்ததி கட்சி”;
கோ.வைரபாண்டியன் அவர்களை நிறுவனர் – தலைவராக கொண்ட “அம்பேத்கர் மக்கள் முன்னணி (AMM);
பி.எம்.மகாலிங்கம் அவர்களை மாநிலத் தலைவராக கொண்ட சேலம் மண்டல கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உழைப்போம் உயர்வோம் பொதுநல சங்கம்
ஆகிய கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் முழு ஆதரவு அளிப்பதாகவும்; இத்தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவதாக என தெரிவித்துள்ளனர்.
English Summary
by poll 2026 dmk alliance tmc support