மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்: 90 வயது மூதாட்டி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை...! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேஷ் மாநிலத்தில் மனிதாபிமானத்தை அதிர்ச்சியடையச் செய்த கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.காண்ட்வா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், 90 வயதுடைய மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி நள்ளிரவில், முகமூடி அணிந்த நால்வர் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.அப்போது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த முதிய பெண்ணை அவர்கள் கொடூரமாக தாக்கி, பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் உதவிக்காக ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கடுமையாக காயமடைந்த அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும், குற்றவாளிகளை விரைவில் பிடிக்க சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி, உள்ளூர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horror Madhya Pradesh Gang harassement 90 year old woman


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->