மகளிர் முன்னேற்றமே மாநில முன்னேற்றம்...! - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Women progress state progress Deputy Chief Minister Udhayanidhi Stalin wishes
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களின் சாதனைகளையும் முன்னேற்றத்தையும் போற்றும் வகையில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில், “சமூகத்தில் பெண்களை கட்டுப்படுத்திய அடிமைச் சங்கிலிகளை முறியடித்து தன்னம்பிக்கையுடன் முன்னேறி வரும் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த உலக மகளிர் தின வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை வெறும் சலுகைகளாக அல்லாமல், அவர்களின் உரிமைகளாக மாற்றி செயல்படுத்தி வருவது திராவிட மாடல் அரசின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிகளால் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என்ற தன்னம்பிக்கையுடன் பெண்கள் சமூகத்தில் தங்கள் முன்னேற்றப் பயணத்தை உறுதியாக தொடர்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழும் மகளிர் நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, பெண்களின் வளர்ச்சி உயர்ந்தால் மாநிலத்தின் வளர்ச்சியும் உயர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன், “மகளிர் உயர மாநிலம் உயரட்டும்” என்று தனது வாழ்த்து செய்தியை நிறைவு செய்துள்ளார்.
English Summary
Women progress state progress Deputy Chief Minister Udhayanidhi Stalin wishes