'அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா'...! - விஜய்-திரிஷா விவகாரத்தில் விமல் நகைச்சுவை பதில் - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு அதன் தலைவர் விஜய் அரசியல் களத்தில் காலடி வைத்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. குறிப்பாக கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அவரை குறிவைத்து குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் முன்வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், விஜய்க்கு ஆதரவாக பலரும் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுக் கருத்துக்களில் ஆதரவு தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியும் புதிய சர்ச்சை கிளம்பியது. அவரிடம் இருந்து விவாகரத்து கோரி, பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் தரப்பில் எந்தத் தெளிவான மறுப்பும் வெளிவராததால், இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாக மாறியது.இதற்கிடையில், தொழிலதிபர் கல்பாத்தி அகோரம் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் வந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு விஜயைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், முன்பு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சிலரும் தற்போது அதிருப்தி தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த விவகாரம் குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் சிரிப்பை ஏற்படுத்தும் விதமாக நகைச்சுவையாக பதிலளித்தார். “அந்தக் காரை இப்போ யார் வைத்திருக்கிறார்?” என்று அவர் கூறியதும் அங்கிருந்தவர்கள் சிரிப்பில் மூழ்கினர்.

அதே நேரத்தில், விஜயின் அரசியல் வருகை மற்றும் தற்போதைய சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்ட பிற கேள்விகளுக்கு விமல் நேரடி பதில் அளிக்காமல் மழுப்பலான பதில்களை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who owns that car now Vimal humorous response VijayTrisha affair


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->