கள்ளக்காதலால் நேர்ந்த கொடூரம்: 18 மாதக் குழந்தையைச் சுவரில் வீசிக் கொன்ற கள்ளக்காதலன் கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 18 மாதக் குழந்தையைக் கள்ளக்காதலன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், 18 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கணவரின் நண்பரான வம்சி என்பவருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கணவரிடம் தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகப் பொய் கூறிவிட்டு, வம்சி தங்கியிருந்த அறைக்கு அந்தப் பெண் அடிக்கடி குழந்தையுடன் சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல குழந்தையுடன் வம்சியின் அறைக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வம்சி, அந்தப் பெண்ணிடமிருந்து 18 மாதக் குழந்தையைப் பிடுங்கி, சுவரில் மிக வேகமாக வீசியுள்ளார். இதில் நிலைகுலைந்த குழந்தை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தது.

குழந்தை இறந்த செய்தியைத் தனது மாமியாரிடம் அந்தப் பெண் தெரிவித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையைத் தேடியபோது, வம்சி இறந்த குழந்தையுடன் ஒரு குளக்கரை அருகே நிற்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வம்சியைக் கைது செய்து குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த காரணத்தினாலேயே குழந்தையைக் கொலை செய்ததாக வம்சி ஒப்புக்கொண்டார். மேலும், வம்சி ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே ஒரு போக்சோ (POCSO) வழக்கில் சிக்கி, இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை முடிந்து சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார். அவர் மீது மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு தவறான உறவினால் பிஞ்சு உயிர் பறிபோன இந்தச் சம்பவம் விஜயவாடா மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic Infanticide in Vijayawada Mothers Paramour Arrested for Murder of 18-Month-Old


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->