தஞ்சை மண்ணில் புதைந்திருந்த பொக்கிஷம்! வயலில் வேலை செய்தபோது வெளிவந்த சாமி சிலைகள்...! - ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள மானம்பாடி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய அலெக்ஸ்சாண்டர், நேற்று காலை தனது சொந்த வயலில் சாகுபடி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

அப்போது வரப்பு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வினோதமான ஒலி எழுந்தது.இதனால் ஆச்சரியமடைந்த அவர், அந்த இடத்தை மேலும் ஆராய்ந்து மண்ணை ஆழமாக வெட்டிப் பார்த்தபோது, அங்கு பழமையான சாமி சிலைகள் புதைந்து கிடப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

யானையின் மேல் திருவாட்சியுடன் அமர்ந்த அம்மன் உருவச்சிலை ஒன்று, மேலும் இரண்டு சாமி சிலைகள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த அதிசயமான கண்டுபிடிப்பை தொடர்ந்து, அலெக்ஸ்சாண்டர் உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சுமார் ஒன்றரை அடி உயரமுடைய யானைமேல் அமர்ந்த அம்மன் சிலை உள்ளிட்ட மூன்று சாமி சிலைகளையும், உடைந்த பானை ஒன்றையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், வயலில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலைகள் பஞ்சலோக கலவையில் வடிவமைக்கப்பட்டவை என்றும், அவை 12ஆம் மற்றும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Treasure buried Thanjavur soil Sami idols found while working field People amazement


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->