ரயில் பயணிகள் கவனத்திற்கு...! பராமரிப்பு பணியால் கோவை - சோரனூர் ரயில் திடீர் ரத்து...!
Attention train passengers Coimbatore Soranur train suddenly cancelled due to maintenance work
பாலக்காடு-சோரனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை சீராக முன்னெடுக்க வசதியாக, கோவை-சோரனூர் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கோவையிலிருந்து சோரனூர் நோக்கி இயக்கப்படும் (வண்டி எண்: 56603) பயணிகள் ரெயில், நாளை (சனிக்கிழமை) மாலை 4.25 மணிக்கு வழக்கம்போல் கோவையில் இருந்து புறப்பட்டாலும், பாலக்காடு ரெயில் நிலையத்திலேயே சேவை நிறுத்தப்படும்.
அதன் பின்னர் சோரனூர் நோக்கி இயக்கம் மேற்கொள்ளப்படாது.இதேபோல், சோரனூரில் இருந்து கோவை நோக்கி இயக்கப்படும் (வண்டி எண்: 56604) பயணிகள் ரெயில், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மாற்றங்கள் குறித்து திருப்பூர் ரெயில்வே அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
English Summary
Attention train passengers Coimbatore Soranur train suddenly cancelled due to maintenance work