மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம்; நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முன் மொழிவார்..! - Seithipunal
Seithipunal


நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை 02 வது நாள் கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன் மொழியவுள்ளார். இன்று தவெக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகான முதல் மற்றும் தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது. 

இக்கூட்டத்தொடரில் முதல் நாள் என்பதால் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றி தொடங்கி வைத்தார். அவரின் உரையில் தவெக அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 04 ஆண்டுகளுக்கு பின் ஆளுநரின் முழு உரையையும் வாசித்துள்ளார். சில கட்சிகள் ஆளுநரின் உரைக்கு வரவேற்பளித்துள்ளன.

இந்நிலையில் நாளை மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன் மொழியவுள்ளார். அதாவது கர்நாடக அரசின் மேகதாது திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தனித் தீர்மானம்; தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியும் தரக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A special resolution against the Mekedatu dam will be moved in the Tamil Nadu Legislative Assembly tomorrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->