எனது கட்சி தேர்தல் அலுவலகம் எரிப்பு... வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா? TVK ரமேஷ் கண்டனம்!
TVK Ramesh condemn Election camp fire
திருச்சி ஸ்ரீ ரங்கம் தொகுதி தவெக வேட்பாளர் ரமேஷ் விடுத்துள்ள கண்டன செய்தியில், "எனது தொகுதி தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு!! பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற உள்ளதா திருவரங்கம் தொகுதி வாக்கு எண்ணிக்கை?
திருச்சி மாவட்டம், திருவரங்கம் (ஶ்ரீரங்கம்) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த எனது தேர்தல் அலுவலகம் ஒன்றை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள். அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
மேலும் தேர்தல் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், எமது கழக நிர்வாகிகள், தோழர்களுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம் உடையாக தலையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Ramesh condemn Election camp fire