அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்...! - தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
Protests across Tamil Nadu against government tvk announcement
தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகிற 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்கேடு அடைந்துள்ளதாகவும், போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கட்சி தலைமையகம் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Protests across Tamil Nadu against government tvk announcement