போட்டியிட்டா தோத்துடுவேன்- தொகுதி மக்களை கண்டு அஞ்சும் அதிமுக அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது, "2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருப்பேன். 300 வாக்குகள் மாறி இருந்தால் நிச்சயம் தோற்று இருப்பேன். என் நிலைமையே வேறாக இருந்திருக்கும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அரசியலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது. எந்த மாதிரியான சூழலில் ஆட்சி இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கூவத்தூரில் நாங்கள் பட்ட பாடு எல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. 

எங்களை தவிர வேறு யாருக்கும் அருகதை இல்லை

பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் தான் நிலைத்த, நீடித்த ஆட்சி உருவாகியது. நான் மாவட்ட செயலாளராக இருப்பதால் எனக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே 10 ஆண்டுகள் நான் எம்எல்ஏவாக இருந்துவிட்டேன். 

அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் விடுபட்ட திட்டங்களை நிறைவு செய்வேன். நல்லவர் ஒருவருக்கு அடுத்த முறை வழிவிட்டு நிற்பேன். இந்த முறை எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும், கூட அதிமுக வெற்றி பெறுவது உறுதி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MINISTER WORRY ABOUT ELECTION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal