திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம் - யார் தெரியுமா?
admk maruthu azhakuraj joined dnmk
அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார். ஆனால், அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர்.

அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், மருது அழகுராஜை தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.
English Summary
admk maruthu azhakuraj joined dnmk