தமிழகப் பெண்களே... சற்று கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள்... இங்கு எங்கே, யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது? - அதிமுக!
ADMK IT Wing condemn DMK Govt MK Stalin
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழகப் பெண்களே... சற்று கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள்...
இப்போது, நீங்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் பாதுகாப்பாக பணிக்கு செல்ல முடிகிறதா? அச்சமின்றி நடமாட முடிகிறதா?
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் கோவை விமான நிலையம் வரை, 2 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, இங்கு எங்கே, யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது?
இதில் திமுக-வினரே ஈடுபட்ட கொடும் குற்றங்கள் எத்தனை? அத்தனைக்கும் வாய்மூடி மவுனியாக இருப்பவர் தானே இன்றைய முதல்வர் முக ஸ்டாலின்?
ஒருமுறையாவது, தனது ஆட்சியின் தவறை Acknowledge செய்யும் மனம் அவருக்கு இருந்ததா?
இப்படிப்பட்ட முதல்வர், இப்படிப்பட்ட இருள் ஆட்சி உங்களுக்கானதா? இல்லவே இல்லை.
கவலை வேண்டாம். இருள் சூழ்ந்த உங்களின் கண்கள், விரைவில் வெளிச்சத்தைப் பார்க்கப் போகிறது. உங்களை தாயாக, தமையனாக அரவணைத்து அழைத்துச் செல்லும், உங்களுக்கான அதிமுக அமையப் போகிறது.
தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், மாதம் ரூ. 2000 என உங்களின் வாழ்வை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களோடு உங்கள் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நம் முதல்வராக வர உள்ளார்கள்.
சகோதரிகளே...
உங்களுக்கான தமிழ்நாடு, விரைவில் வருகிறது. கண்களைத் திறக்க தயாராகுங்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK IT Wing condemn DMK Govt MK Stalin